வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! 

0
336

வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!!

ஒவ்வொருவரும் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காக ஏதேனும் ஒரு வியாபாரம் மற்றும் தொழில் அல்லது வேலை செய்து வருகின்றனர். தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வாழ்க்கையை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறோம். வியாபாரம் அல்லது தொழிலில் லாபமும் மற்றும் நஷ்டமும் ஏற்படுவது வழக்கம் தான்.அதில் சிலர் மட்டும் அவர்களின் தொழிலில் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற்றத்தை காண்பார்கள். சிலருக்கு தான் முதலீடு செய்த தொகையை கூட திரும்ப பெறமுடியாத அளவிற்கு நஷ்டமும் மற்றும் லாபம் குறைவும் ஏற்படுவதுண்டு.

தொழில் வியாபாரங்களில் ஏற்படும் நஷ்டங்களை தவிர்க்கவும் லாபங்கள் அதிகம் பெறவும் முன்னோர்களால் சில பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் வியாபார விருத்தி யந்திரம்.

இந்த வியாபாரிகள், வணிகர்கள், புதியதாக தொழில் தொடங்குபவர்கள் அனைவருக்குமான சிறந்த யந்திரம். சக்திமிக்க இந்த யந்திரங்களை தொழிற்கூடங்களில் கிழக்கு முகமாக வைத்து வணங்க வேண்டும்.

வாரம் ஒரு முறை அல்லது அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற நாட்களில் சந்தனம், குங்குமம் கலந்து பொட்டு வைத்து மாலை தொடுத்து வழிபாடு செய்து வர நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம்.மேலும் இந்த யந்திரத்தை தொடர்ந்து பூஜை செய்து வருவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.அவைகள் கீழே பின் வருமாறு.வியாபாரம் விருத்தி அடையும்.தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

தொழில் போட்டிகளை சமாளிக்கலாம்.புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கான சிறந்த யந்திரம்.வியாபாரம், தொழிலில் இருக்கும் கண்திருஷ்டி நீங்கும்.இதில் நம்பிக்கை இருந்தால் நீங்கள் செய்து பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.

 

Previous articleவிக்ரம் திரைப்படம் ஹிட்டாவதற்கு காரணம் இவர்கள் மட்டுமே! மனம் திறந்து பேசிய கமல்!
Next articleஜம்முனு இருக்கும் இவரின் சொத்து மதிப்பு கேட்டால் நீங்களே வியந்து போவீங்க!..