உங்கள் பிரிட்ஜில் வீசும் கெட்ட வாடை நீங்க.. இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Rupa

 

நவீன காலகட்டத்தில் அத்தியாவசிய பொருளாக மாறி உள்ளது ‘பிரிட்ஜ்’.இது இல்லாத வீடுகளே இல்லை.காய்கறிகள்,பழங்களை பிரஸாக வைத்துக் கொள்ள,உணவுகளை பதப்படுத்தி வைக்க,தண்ணீரை குளிர்விக்க பிரிட்ஜ் பயன்படுகிறது.

பிரிட்ஜை நாம் பராமரிப்பதை பொறுத்து அதன் ஆயுட்காலம் நீடிக்கிறது.நீங்கள் பிரிட்ஜை பராமரிக்க தவறும் போது அதில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசக்கூடும்.வாரம் ஒருமுறை பிரிட்ஜில் இருக்கின்ற பொருட்களை வெளியில் வைத்துவிட்டு நீர் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.மாதம் ஒருமுறை சோப் நீர் பயன்படுத்தி பிரிட்ஜை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.

பிரிட்ஜில் படிந்திருக்கும் ஐஸ்கட்டிகளை அகற்றி முறையாக பராமரிக்கும் போது கெட்ட மணம் வீசுவது கண்ட்ரோல் ஆகும்.

வாங்கி வரும் காய்கறிகளை நீரில் அலசி ஒரு காட்டன் துணியில் துடைத்து முறையாக பேக் செய்து பிரிட்ஜில் வைக்க வேண்டும்.கொத்தமல்லி தழை மற்றும் கீரையின் வேரை அகற்றிவிட்டு ஒரு கவரில் போட்டு பராமரிக்க வேண்டும்.

மாவு,குழம்பு போன்ற உணவுப் பொருட்களை திறந்த நிலையில் பிரிட்ஜில் வைக்காமல் மூடி வைக்க வேண்டும்.புளித்த மாவு பிரிட்ஜில் துர்நாற்றத்தை உண்டுபண்ணும்.பால் பொருட்களை பிரிட்ஜில் வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.சீஸ்,தயிர் போன்ற பால் பொருட்களில் இருந்து துர்நாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.அதேபோல் மீந்து போன உணவுகளை ஒரு டப்பாவில் போட்டு அடைத்து பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

பூக்களை பிரிட்ஜில் வைத்தால் அதன் வாசனை மற்ற உணவுப் பொருட்கள் மீது ஒட்டிக் கொள்ளும்.எனவே பூக்களை ஒரு கவரில் போட்டு கட்டி வைக்க வேண்டும்.சீக்கிரம் அழுகக் கூடிய காய்கறிகளை அதிக கவனத்துடன் பராமரிக்க வேண்டும்.அதேபோல் வெங்காயம்,பூண்டு,இஞ்சி போன்ற பொருட்களை பிரிட்ஜில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

பிரிட்ஜில் வீசும் கெட்ட வாடை நீங்க என்ன செய்யலாம்?

டிப் 01:

ஒரு கிண்ணத்தில் முழு எலுமிச்சையின் சாறு மற்றும் சிறிது தூள் உப்பு சேர்த்து மிக்ஸ் செய்யவும்.பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் ஸ்ப்ரே செய்யவும்.பிறகு காட்டன் துணியை பயன்படுத்தி துடைத்தெடுக்கவும்.இப்படி செய்தால் பிரிட்ஜில் அழுக்கு,துர்நாற்றம் அனைத்தும் நீங்கிவிடும்.

டிப் 02:

ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி சிறிது வினிகர் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.பிறகு ஒரு காட்டன் துணியை அதில் நினைத்து பிரிட்ஜ் முழுவதும் துடைத்தெடுக்கவும்.இப்படி செய்வதால் பிரிட்ஜில் இருந்து கெட்ட வாடை வீசுவது கட்டுப்படும்.அதேபோல் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு பயன்படுத்தி பிரிட்ஜை துடைத்தால் துர்நற்றம் நீங்கிவிடும்.