பாத்ரூம் தரையில் படிந்துள்ள அழுக்கு கறைகள் அடியோடு நீங்க.. சீகைக்காய் பொடியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Divya

உங்கள் வீட்டு பாத்ரூமில் படிந்துள்ள அனைத்துவித கறைகளும் நீங்க சீகைக்காயுடன் சில பொருட்களை சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சீகைக்காய் – இரண்டு பாக்கெட்
2)பேக்கிங் சோடா – மூன்று தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு பாக்கட்

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் பாத்ரூமில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவிட வேண்டும்.

ஸ்டெப் 02:

பின்னர் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

பின்னர் இரண்டு பாக்கட் சீகைக்காய் பொடியை அதில் கொட்டி நன்றாக கலக்க வேண்டும்.

ஸ்டெப் 04:

அதன் பிறகு மூன்று தேக்கரண்டி அளவு பேக்கிங் சோடாவை அதில் கொட்டி நுரை வரும் அளவிற்கு கலந்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 05:

இந்த தண்ணீரை பாத்ரூம் முழுவதும் ஊற்றி 30 நிமிடங்களுக்கு மேல் ஊறவைக்க வேண்டும்.அதன் பின்னர் பாத்ரூம் பிரஷ் கொண்டு தேய்த்து க்ளீன் செய்தால் அழுக்கு கறைகள் நீங்கி தரை பளிச்சிடும்.

தேவையான பொருட்கள்:-

1)சீகைக்காய் – மூன்று பாக்கட்
2)எலுமிச்சம் பழம் – ஒன்று
3)கல் உப்பு – ஒரு தேக்கரண்டி
4)வாஷிங் சோடா – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு பிளாஸ்டிக் பக்கெட் எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு மூன்று பாக்கட் சீகைக்காய் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு கல் உப்பை அதில் கொட்டி கொள்ள வேண்டும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி வாஷிங் சோடா சேர்த்து கலந்துவிட வேண்டும்.

ஸ்டெப் 03:

அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை பக்கெட்டிற்கு பிழிந்துவிட வேண்டும்.

ஸ்டெப் 04:

பிறகு பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி கலக்கி பாத்ரூம் முழுவதும் ஊற்றிவிட வேண்டும்.

ஸ்டெப் 05:

அதன் பின்னர் பிரஷ் கொண்டு பாத்ரூம் கறைகளை தேய்த்து சுத்தம் செய்தால் அழுக்குகள் அடித்துக் கொண்டு வெளியேறிவிடும்.பாத்ரூமில் மஞ்சள் கறைகள்,பாசி,உப்பு கறை இருந்தால் இந்த குறிப்பை பின்பற்றி அழுக்கை நீக்கிவிடலாம்.