உங்கள் வங்கி கணக்கிற்கு அடுத்த மாதம் முதல் தமிழக அரசின் ரூ 1000 கிடைக்க.. இதை மட்டும் மாற்றுங்கள்!!

Photo of author

By Rupa

Kalaingar Magalir Urimai Thogai:கலைஞர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் தங்களின் வங்கி கணக்கை சரி பார்க்கும்படி கூறியுள்ளனர்.

கலைஞர் உரிமைத் தொகையானது திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டது. இதில் பல வரைமுறைகளை வகுத்ததால் அனைத்து பெண்களுக்கும் கிடைக்கவில்லை, நாளடைவில் இந்த உரிமைத் தொகையானது அனைத்து பெண்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.

இதனடிப்படையில் இரண்டாவது முறையாக இந்த ஆயிரம் ரூபாய் கிடைக்காதவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் படி அறிவிப்பு வெளியானது. மேலும் இதில், பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருக்கும் பெண்கள் துப்புரவு பணியாளர்களின் மனைவிகள் என அனைவருக்கும் கிடைக்கும் எனக் கூறினர்.

இவ்வாறு இருக்கையில் பலருக்கு ஒப்புதல் அளிக்கப்படும் அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வருவதில்லை. இதற்கு முக்கிய காரணமாக வங்கி கணக்கு எண்ணானது செயலில் இல்லாமல் இருப்பது சரிவர தான் காரணம் எனக் கூறுகின்றனர். இவர்கள் விண்ணப்பத்தில் அளித்திருக்கும் வங்கி எண்ணானது தற்பொழுது செயலில் இருக்காது,அதனால் மட்டுமே பணம் வராமல் இருக்கும்.

அதனை வங்கிக்கு சென்று மீண்டும் அப்டேட் செய்ய வேண்டும். இவ்வாறு அப்டேட் செய்ததை இ சேவை மையத்திற்கு சென்று புதுப்பித்துக் கொண்டால் தற்பொழுது கொடுத்துள்ள வங்கி கணக்கிற்கு ஆயிரம் ரூபாய் வரும் என கூறியுள்ளனர். அவ்வாறு இ சேவை மையத்திற்கு வங்கி கணக்கு இணைக்க செல்லும் பட்சத்தில் கட்டாயம் ஆதார் கார்டு ரேஷன் கார்டு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.