இ-பான் கார்டு பெறுவது இனி ரொம்பே ஈஸி!! ஜஸ்ட் இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!!

Photo of author

By Divya

இ-பான் கார்டு பெறுவது இனி ரொம்பே ஈஸி!! ஜஸ்ட் இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!!

நம் நாட்டில் பணப்பரிமாற்றம் செய்வதற்கு,வருமான வரி செலுத்துவதற்கு பான் கார்டு மிகவும் முக்கியமான ஆவணமாகும்.இது ஒரு 10 இலக்க வரிவடிவ குறியீடு கொண்ட அட்டை.இதை நம் இந்திய வருவாய் துறை வழங்கி வருகிறது.இவை ஓர் நிரந்தர எண் ஆகும்.நீங்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திற்கு மாறினாலும் உங்கள் பான் கார்டு எண் மாறாது.அது மட்டுமின்றி உங்கள் பான் எண்ணை வேறொருவருக்கு மாற்ற முடியாது.

பான் கார்டு பயன்கள்

வருமான வரி செலுத்த இவை முக்கிய அடையாள ஆவணமாகும்.

வங்கிகளில் கடன் பெற,முதலீடு தொடங்க இவை மிகவும் முக்கியம்.

பண பரிமாற்றம்,வீடு,நிலம் வாங்குதல் விற்றல் போன்றவற்றிற்கு பான் கார்டு தேவைப்படுகிறது.

நம் நாட்டில் ஆதார் கார்டு எவ்வளவு முக்கியமான ஆவணமாக உள்ளதோ அதேபோல் தான் பான் கார்டும் உள்ளது.பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் அவை வந்தடைய சில காலங்கள் ஆகும்.ஒருவேளை உங்களுக்கு உடனடியாக பான் கார்டு தேவைப்படுகிறது என்றால் நீங்கள் வருமானவரித்துறை அறிமுகப்படுத்தியுள்ள இ-பான் கார்டுக்கு அப்ளை செய்து உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.

இ-பான் கார்டு பெறுவது எப்படி?

படி 01:

முதலில் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற அதிகாரபூர்வ போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.

படி 02:

பிறகு அதிலுள்ள ஹோம் பேஜை கிளிக் செய்யவும்.பிறகு “Instant e-PAN” என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 03:

பின்னர் அதில் “Get New e-PAN” என்பதைக் கிளிக் செய்து உங்களின் 12 இலக்க ஆதார் நம்பரை என்டர் செய்யவும்.அதன் பின்னர் “Continue” என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 04:

பின்னர் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை பதிவிடவும்.

படி 05:

ஆதார் விவரங்களை சரிபார்க்க தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.அதன் பிறகு “Continue” என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 06:

இவ்வாறு செய்த பின்னர் “Download E-PAN” என்பதைக் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.பிறகு தேவைப்பட்டால் அதை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.