அனுஷ்கா வீட்டில் கெட்டி மேளச்சத்தம்! நடந்த ரகசிய நிச்சயதார்த்தம்!

Photo of author

By Rupa

அனுஷ்கா வீட்டில் கெட்டி மேளச்சத்தம்! நடந்த ரகசிய நிச்சயதார்த்தம்!

அனுஷ்கா தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னடம் என அனைத்து திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்தார்.அதுமட்டுமின்றி பல நடிகர்களுடனும் இவரை இணைத்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.குறிப்பாக பாகுபலி படம் வெளிவந்த போது பிரபாஸை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்யப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தது.

ஆனால் ஏதோ காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.அதனையடுத்து ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரை அனுஷ்கா காதலித்து வருவதாகவும்,அவரை திருமணம் செய்யப்போவதாக செய்திகள் அரசல்புரசலாக வெளிவந்தது.அதற்கடுத்து ரஞ்சி கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தது.அதனையெல்லாம் தவிடுபொடியாக்கும் நோக்கில் விவாகரத்து பெற்ற 44 வயது தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடியை திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமாகவே இருந்தது.

இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டது,தற்போது உங்களுக்கு 40 வயதாகிறது.நீங்கள் இயக்குனரை திருமணம் செய்யப்போவதாக கூறுவது உண்மையா என்று கேட்டனர்.உங்கள் திருமணம் எப்போது என கேட்டுள்ளார்கள்.அதற்கு அனுஷ்கா கூறியதாவது,எனக்கு திருமணம் எப்போது என்று தெரியவில்லை.திருமணம் உறுதியாகும்போது கண்டிப்பாக அனைவரிடமும் தெரிவிப்பேன் என்றார்.

இந்த நிலையில் அனுஷ்காவுக்கு துபாய் தொழிலதிபர் ஒருவருடன் நிச்சியமாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.அந்த தொழிலதிபர் அனுஷ்காவை விட சிறிய வயது உடையவர் என்றும் கூறுகின்றனர்.இந்த நிச்சயம் தொடர்பாக எந்த கருத்தையும் அனுஷ்கா தெரிவிக்கவில்லை.