காவிரி ஆற்றில் நீந்தி வந்த ராட்சத மீன்!

Photo of author

By Kowsalya

காவிரி ஆற்றில் நீந்தி வந்த ராட்சத மீன்!

காவிரி டெல்டா பகுதிகளில் அதிகமான மழை பொழிந்து வருகிறது. அதனால் காவிரி அணை தேக்கங்களில் நீர் நிரம்பி வந்த நிலையில் தமிழக டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.அதனால் அங்கிருந்த ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து தருமபுரி மற்றும் சேலம் பகுதிகளில் 40,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு காரணமாக தர்மபுரியில் காவிரி டெல்டா பகுதியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரில் இராட்சத மீன் நீந்தி வரும் காட்சி இணையதளத்தில் பரவலாக உள்ளது.

இதுவரை அது போன்ற ராட்சத மீன் கண்டதில்லை என மக்கள் கூறி வருகின்றனர்.