தளபதி விஜய் க்கு அனிரூத் கொடுத்த கிப்ட்! ஷாக்கான ரசிகர்கள்!
சமீபகாலமாக அனிருத் மிகப்பெரிய இசை ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இந்த காலகட்டத்தில் இவர் இசை அமைக்காத படங்கள் மிகவும் குறைவாக தான் உள்ளது. டாப் ஹீரோக்களின் படங்கள் அனைத்திலும் அனிருத் தான் இசை அமைப்பாளராக நியமிக்கின்றனர். விஜய், அஜித், கமல் என பெரிய தலைகளின் படத்தில் இவர் இசை இன்றி இருக்காது. கதையை வைத்து ஓடாத படங்கள் கூட இவரது இசையை வைத்து ஓடி விடும் என்றும் கூறுகின்றனர். சமீபத்தில் பீஸ்ட் திரைப்படத்தையடுத்து கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் இசை பெருமளவு பேசப்பட்டு வருகிறது.சமீபகாலமாக எங்கு பார்த்தாலும் பட்டி தொட்டி எங்கும் இவரது பாடல் தான் கேட்டு வருகின்றனர்.
https://www.instagram.com/reel/CfGDWOUAcQw/?utm_source=ig_web_copy_link
சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரது இசைக்கும், பாட்டிற்கும் அடிமையாகமால் யாரும் இருக்க முடியாது. மேலும் இன்று தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து மாவட்டத்திலும் அவரது ரசிகர்கள் ரத்த தானம் செய்தும் அன்னதானம் செய்தும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். விஜயின் தாயார் தனது மகனுக்கு பரிசளிக்கும் விதத்தில் ஆசிரமத்திற்கு சென்று உணவு வழங்கியுள்ளார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அத்தோடு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நெல்சன், பாடகர் ஜான்சரோவ் ஆகியோர் இணைந்து விஜய்-க்கு பரிசளிக்கும் விதத்தில் ஒரு பாடலை தயார் செய்துள்ளனர். அந்த பாடல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.அந்த பாடல் இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் டிரெண்டாகி ஆகி வருகிறது.