கேப்டன் பதவிக்கு கில் தான் சரியான நபர்! பயிற்சியாளர் நெஹ்ரா பேட்டி!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கு அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மான் கில் அவர்கள் தான் சரியான நபர் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளருமான ஆஷிஸ் நெஹ்ரா அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு அதாவது 24 லட்சம் ரூபாய்க்கு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதற்கு முன்னர் அதே ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 20 குடிக்கும் ஏலம் போனார்.
இந்த வீரர்கள் ஏலம் மட்டும் இல்லாமல் இதற்கு முன்னரே வீரர்களை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு வழங்கப்பட்டது. அந்த வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கடந்த இரண்டு நாட்களில் கேப்டனாக செயல்பட்டு வந்த கருதிக் பாண்டியா அவர்களை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இதை அடுத்து குஜராத் அணிக்கு அடுத்த கேப்டன் யார் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் சுப்மான் கில் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அறிவிப்பு வெளியான நிலையில் கேப்டன் பதவிக்கு சுப்மான் கில் தான் சரியான நபர் என்று ஆஷிஸ் நெஹ்ரா அவர்கள் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சமீபத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா அவர்கள் “ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு மாற்று வீரரை மீண்டும் அணிக்கு கொண்டு வருவது என்பது கடினம். ஏன் என்றால் அவருடைய திறமை மற்றும் அனுபவத்தை கருத்தில் கொள்ளும் பொழுது அவரை மாற்றுவது கடினமான செயல் என்றாலும் அவர் தற்பொழுது அணியில் இல்லை.
எனவே ஹர்திக் பாண்டியா அவர்களுக்கு மாற்றாக சுப்மான் கில் அவர்களை கேப்டனாக நியமித்துள்ளோம். சுப்மான் கில் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக தன்னை தானே எவ்வாறு மேம்படுத்தி வருகிறார் என்பதை நாங்கள் கவனித்து வருகின்றோம்.
சுப்மான் கில் அவர்களுக்கு 25 வயது தான் ஆகின்றது என்றாலும் அவரிடம் நல்ல தலைமைப் பண்பு உள்ளது. சுப்மான் கில் அவர்களை நாங்கள் நம்புகிறோம். அதனால் தான் சுப்மான் கில் அவர்களை குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமித்துள்ளோம்.
நல்ல ரிசல்ட்டுகளை எப்பொழுதும் வேண்டும் என்று தேடும் நபர் நான் கிடையாது. நல்ல ரிசல்ட் முக்கியம்தான் என்றாலும் கேப்டன் பதவி என்று வரும் பொழுது மற்ற சில விஷயங்களை பார்க்க வேண்டும். அந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கு சுப்மான் கில் அவர்கள் சரியான நபர் என்று எங்களுக்குத் தெரிகின்றது” என்று கூறியுள்ளார்.