“ஷேன் வார்னும் நானும் ரகசிய உறவில் இருந்தோம்…” உலக பிரபலம் வெளியிட்ட சீக்ரெட்

Photo of author

By Vinoth

“ஷேன் வார்னும் நானும் ரகசிய உறவில் இருந்தோம்…” உலக பிரபலம் வெளியிட்ட சீக்ரெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் சமீபத்தில் வெளிநாடு சுற்றுலா சென்றிருந்த போது மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் ஷேன் வார்ன். இவரின் மாயாஜால சுழலில் சிக்கி பேட்ஸ்மேன்கள் தடுமாறுவது டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகுகளில் ஒன்று. உலகளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலராக இன்று வரை இருந்து வரும் ஷேன் வார்ன் சமீபத்தில் வெளிநாடு சுற்றுலா சென்றிருந்த போது இயற்கை எய்தினார்.

ஷேன் வார்னின் கிரிக்கெட் வாழ்க்கையப் போல அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. பல பெண்களோடு செக்ஸ் உறவில் இருந்த ஷேன் வார்ன் அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தவர்.

இந்நிலையில் இப்போது உலகின் அழகான பாட்டி என அழைக்கப்படும் ஜினா ஸ்டிவார்ட் தான் ஷேன் வார்னுடன் உறவில் இருந்ததை வெளிப்படுத்தியுள்ளார். அவர் “கடந்த சில மாதங்களாக நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். உலகம் ஒரு லெஜண்ட்டை இழந்தது, நான் ஒரு நண்பரையும் நம்பிக்கையாளரையும் இழந்தேன். நினைத்துக்கூட பார்க்க முடியாதது நடந்தது. நான் ஷேனுடன் டேட்டிங் செய்து கொண்டிருந்தேன் ஆனால் அது யாருக்கும் தெரியாது. அவர் அதை ரகசியமாக வைத்திருக்க விரும்பினார்.” என்று கூறியுள்ளார்.

மேலும் 2018 ஆம் ஆண்டு தங்கள் சந்திப்பு நடந்தது குறித்து “அவர் கோல்ட் கோஸ்டுக்கு வந்தார். கிரிக்கெட் விளையாட்டிற்குப் பிறகு நான் அவரைச் சந்தித்தேன். நாங்கள் சந்தித்து இரவு முழுவதும் பேசிக்கொண்டு ஒருவருக்கொருவர் தெரிந்துகொண்டோம். நான் அவரை மிகவும் சுவாரஸ்யமானவராக உணர்ந்தேன். அவருடைய வாழ்க்கையைப் பற்றியும், அவரைப் பற்றிக் கேட்பதற்கு எனக்குப் பிடித்திருந்தது. நாங்கள் மிகவும் நெருக்கமாகிவிட்டோம், எங்கள் கதையை மக்கள் பார்வையில் இருந்து ரகசியமாக வைப்பேன் என்று அவரிடம் வாக்குறுதி அளித்தேன்.” எனக் கூறியுள்ளார்.