இஞ்சி மட்டும் போதும்! பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு!
பெண்களுக்கு எப்பொழுதும் கவனத்தில் இருப்பது அவர்களின் கூந்தல் மற்றும் முகத்தில் மட்டுமே தான். அந்த வகையில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றியும் அதற்கு என்ன தீர்வு என்பதனையும் இந்த பதிவின் மூலம் காணலாம்.
நம்முடைய உச்சந்தலை காய்ந்து போவதனால் தான் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதில் ஒன்று பொடுகு இவை பாக்டீரியா தொற்று மற்றும் பிற காரணங்களினாலும் ஏற்படுகின்றது. இதனை முற்றிலும் போக்க நாம் கடைகளில் விற்கும் ரசாயன கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றோம் ஆனால் அவ்வாறு செய்வது உடல்நலத்தை பாதிக்கும்.
வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் இஞ்சி பொடுகு தொல்லையை முற்றிலும் குணப்படுத்தும். இஞ்சியில் ஆக்சிஜனேற்ற பண்புள்ளது மேலும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் நுண்ணுயிரி எதிர்க்கும் பண்புகளும் இதில் உள்ளது அதனால் தலையில் உள்ள பொடுகை போக்க இஞ்சி மிகவும் சிறந்த மருந்தாக உள்ளது.
இஞ்சி சாறு:
இஞ்சி சாரில் பூஞ்சை எதற்கு பண்பும் நாசினி பண்பும் உள்ளது இஞ்சி சாறை உச்சந்தலையில் தேய்ப்பதன் மூலம் பி எச் அளவை சமநிலைப்படுத்துகிறது. மேலும் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்திற்கும் உதவுகிறது. இஞ்சி சாறில் பஞ்சினை நனைத்து உச்சந்தலையில் வைத்து வைத்து எடுக்க வேண்டும்.
இஞ்சி எண்ணெய்:
இஞ்சி எண்ணெய் நம்முடைய முடிக்கு பலவிதத்தில் நன்மை தரக்கூடியதாக அமைந்துள்ளது. முதலில் தேங்காய் எண்ணெயை மிதமாக சூடு படுத்திக் கொள்ள வேண்டும். அதில் இஞ்சி சாறினை சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.அதனை உச்சந்தலையில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பொடுகு தொல்லைக்கு முற்றிலும் தீர்வாக அமையும்.