சிறுமி கருமுட்டை விவகாரம்!மேலும் ஒரு தனியார் மருத்துவமனை சீல்!
ஈரோடு மாவட்டத்தில் சுதா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில் ஈரோடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை விற்பனை செய்த விவகாரம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக சிறுமியின் தாய் உள்பட நான்கு பேர் மீது ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அந்த விசாரணையின் போது ஈரோடு மற்றும் பெருந்துறையில் பிரபல தனியார் சுதா மருத்துவமனையை சுகாதாரத்துறை அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
சேலத்தில் உள்ள தனியார் சுதா மருத்துவமனை கடந்த ஆறாம் தேதி சுகாதாரத்துறையின் இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி கருமுட்டை எடுத்ததில் முறைகேடு நடத்து இருப்பதை உறுதி செய்தனர். மேலும் இதனையடுத்து சம்பந்தப்பட்ட சுதா மருத்துவமனையில் இருந்த ஸ்கேன் சென்டர் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. மேலும் தனியார் சுதா மருத்துவமனை விரைவில் மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்தை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் புதிதாக நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை. மேலும் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் வீடுகள் திரும்பி உள்ளனர் இதனை அடுத்து சேலம் மாவட்ட சுகாதாரப்பணி இணை இயக்குனர் நெடுமாறன் தலைமையினால அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சுதா மருத்துவமனையில் உள்ள நுழைவுகள் ,சிகிச்சை மையம், ஸ்கேன் சென்டர், ஆவண பாதுகாப்பு அறை உள்ளிட்ட 11 இடங்களுக்கு முழுமையாக மூடி சீல் வைத்தனர்.