பெண்களே இடுப்பு வலி வராமல் இருக்க உங்கள் சமையலறையில் இந்த முறையை கையாளுங்கள்!!!

Photo of author

By Pavithra

பெண்களுக்கு மிகப் பெரிய உலகமாக இருப்பது தன்னுடைய குடும்பமும் சமையல் அறையும் தான். பொதுவாகவே ஆண்களை விட உடல் வலிமையில் குறைந்தவர்களாகவே பெண்கள் இருப்பார்கள். பெண்கள் நிண்ட நேரம் வேலை செய்யும் பொழுது உடல் சோர்வும் உடல் வலியும் ஏற்படக்கூடும்.இதனை ஓரளவு குறைக்க உங்கள் சமையலறையில் சில விஷயங்களை பின்பற்றுங்கள்.

சமைக்கும் முன்பே சமையலுக்கு தேவையான பொருக்களை எடுத்து வைத்துகொண்டு சமயத்தால் சமையல் செய்யும் நேரமும் குறையும்,அதுடன் உடல் சோர்வடையாமல் இருக்கும்.

மேலும் சமையலறையின் அலமாரி அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்ணின் உயரத்திற்க்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். பெண்கள் அலமாரி பொருளை மேல் நோக்கி பார்த்து எடுக்கும்போது கழுத்து வலியும், கை வலியும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.ஒருவேளை உங்கள் அலமாரி உயரத்தில் இருக்கின்றது என்றால் பொருட்களை எக்கி எடுக்காமல் ஒரு பலகையை போட்டு அதன் மீது ஏறி எடுக்கலாம்.இதனால் உங்களுக்கு ஏற்படும் கழுத்து வலியும் இடுப்பு வலியும் குறையும்.

காய்கறிகளை வெட்டும்போது கீழே அமர்ந்துகொண்டு வெட்டினால், கைகளில் இருக்கும் சக்தியை மட்டுமே பயன்படுத்தி வெட்டுவோம். இதனால் விரைவில் தோள்பட்டை வலி எடுத்துக் கொள்ளும்.இதனை குறைக்க நாம் நின்று கொண்டு காய்களை வெட்டலாம்.நின்று கொண்டு காய்களை வெட்டுவதால் உடலின் மொத்த சக்தியும் காய் வெட்டுவதற்கு செலுத்துவதால் தோள்பட்டையில் ஏற்படும் வலி குறையும்.

சமைக்கும் பொழுது உங்களுக்கு பின்னால் இருக்கும் பொருளை திரும்பாமல் இடுப்பை வளைத்து கைகளை மட்டும் நீட்டி எடுப்பதால் உங்களுக்கு இடுப்பு தசை இறுக்களாகி வலிக்க நேரிடும்.எனவே உங்கள் பின்னால் இருக்கும் பொருளை எடுக்க உங்கள் உடலை முழுவதுமாக முழுவதுமாக திருப்பி அந்த பொருளை கையாளுவது உங்களின் இடுப்பு வலியை குறைக்கும்.

4.பாத்திரம் கழுவப் பயன்படும் தொட்டியின் உயரம் அந்த குடும்ப பெண்ணின் உயரத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.அந்த பெண்ணின் உயரத்திற்கு குறைவாகவோ அதாவது அவர் குனிந்து கழுவும் வகையிலோ அல்லது அந்த பெண்ணின் உயரத்திற்கு அதிகமாகவோ அதாவது அவர் எக்கி பாத்திரம் கழுவும் வகையிலோ தொட்டிய இருக்கக் கூடாது.இதனால் அவர்களுக்கு இடுப்புவலி அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பெண்களாகிய நாம் ஆரோக்கியமாக இருந்தால்தான் நம் வீட்டில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.எனவே நம் ஆரோக்கியத்தை பேணிக்காக்க இதுபோன்ற சில வழிகளை பின்பற்றலாம்.