Cinema

லேடி சூப்பர் ஸ்டார் கொடுத்த கிளாமர் போஸ்! வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் தற்போது வலம்வந்து கொண்டிருக்கும் நடிகைகளில் டாப் 1 நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் வாங்கும் இவர் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக கருதப்படுகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர் பல காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும் மீண்டும் புதுப்பொலிவுடன் அவற்றிலிருந்து மீண்டு வந்து விடுகிறார்.

தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதல் கொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஓணம் பண்டிகை, கோவா என சுற்றுலா சென்று விட்டு தற்போது சென்னை வந்துள்ள நயன்தாரா அடுத்தகட்டமாக சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

அதன் தொடக்கமாக ஆங்கில பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்கு கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நயன்தாரா இதுபோன்ற கிளாமர் போஸ் கொடுத்து பல நாட்கள் ஆனதால் ரசிகர்கள் இந்த போட்டோவை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

Leave a Comment