கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ… சூரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய படக்குழு!!

0
140

கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ… சூரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய படக்குழு!!

 

கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு நடிகர் சூரியா அவர்களுக்கு கங்குவா படக்குழு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது.

 

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூரியா தற்பொழுது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். கங்குவா திரைப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகிறார். நடிகை திஷா பட்டாணி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் நடிகர்கள்  யோகிபாபு, ஜகபதி பாபு, கோவை சரளா, ஆனந்தராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

 

கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து  கங்குவா திரைப்படத்தை தயாரிக்கின்றது. இந்நிலையில் கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ பற்றிய அப்டேட்டை படக்குழு சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதன்படி நேற்று காலையில் கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஜூலை 23ம் தேதி அதிகாலை 12 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது. அதன்படி இன்று அதிகாலை 12.01 மணிக்கு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டது.

 

நடிகர் சூரியா அவர்களின் பிறந்த நாளான இன்று கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு படக்குழு நடிகர் சூரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளது. கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றது

 

Previous articleபல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!
Next articleகாவிரி நீர் தொடர்பான பிரச்சனை… முதல்வர் முக.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்!!