கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் தற்போது உலகம் முழுவதும் சுமார் 220க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் உலகளாவிய பொருளாதாரம் மிகப்பெரிய மந்த நிலையை அடைந்திருக்கிறது.இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடும் கோபத்தில் இருக்கிறது.
உலக நாடுகள் அனைத்தும் இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து தப்பிப்பது எவ்வாறு என்று யோசித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், சீனா தன்னுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதனால் அமெரிக்கா, ரஷ்யா, உள்ளிட்ட உலக வல்லரசு நாடுகள் சீனாவின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் உலகளாவிய நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 44.18 கோடியை கடந்திருக்கிறது. இதனடிப்படையில், உலகம்முழுவதும் தற்சமயம் 44,18,11,959 நபர்களுக்கு நோய்த்தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நோய்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் 37,48,49,942 நபர்கள் குணமடைந்திருக்கிறார்கள். அத்துடன் இந்த நோய் தொற்றுக்கு இதுவரையில் 6000,658 நபர்கள் பலியாகியிருக்கிறார்கள்.
மேலும் இந்த நோய் தொற்றுக்கு தற்போது 6,09,61,359 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் சிகிச்சை பெறுபவர்களில் 73, 270 பேர் கவலைக்கிடமாக இருந்து வருகிறார்கள்.