உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க சிறப்பு குழு! தமிழக அரசு முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை!

0
68

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தீவிரமான போர் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், அங்கே சிக்கியிருக்கும் இந்திய மீனவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு மிகத் தீவிரமாக இறங்கி வருகிறது.

அதன்படி உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியோடு இந்தியா உக்ரைனின் அந்த நாடுகளுக்கு விமானத்தை அனுப்பி இந்திய மாணவர்களையும், இந்திய மக்களையும், மீட்டு வருகிறது.இந்தநிலையில், உக்ரைன் நாட்டில் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறப்பு குழுவை ஏற்படுத்தியிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அரசின் சார்பாக வெளியிடப்பட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உக்ரைன் நாட்டில் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்களை மீட்க மாநில மாவட்ட அளவிலும் அதோடு டெல்லியிலும் தொடர்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அவசர கட்டுப்பாட்டு மையங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. அவசர கட்டுப்பாட்டு மையங்களில் இதுவரையில் 3025 தொலைபேசி அழைப்புகளும், 4,390 மின்னஞ்சல்களும் பெறப்பட்டிருக்கின்றன.

அதனடிப்படையில் தமிழகத்தைச் சார்ந்த 2223 மாணவர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களை தமிழகம் மீட்டு வருவதற்காக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு ஏற்கக்கூடிய தமிழக மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களுடைய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு வீட்டு பணிகளை தமிழக அரசுடன் ஒன்றிணைந்து விரைந்து முன்னெடுக்க ஏதுவாக மத்திய அரசின் சார்பாக ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவரை நியமனம் செய்திட கேட்டுக் கொண்டதனடிப்படையில், மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சக செயலாளர் ராஜாராமன் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டு மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நேற்று காலை 6 மணி முதல் 193 மாணவர்கள் தமிழகம் திரும்பியிருக்கிறார்கள். இவர்கள் தமிழக அரசின் செலவில் அவர்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனிலிருக்கும் தமிழகத்தைச் சார்ந்த மீதமிருக்கின்ற மாணவர்களை உடனடியாக மீட்பது குறித்து ஆலோசனை கூட்டம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றதாக தெரிகிறது.

இந்த கூட்டத்தின் தலைமை செயலாளர் இறையன்பு, பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மீதமிருக்கின்ற தமிழக மாணவர்களை மீட்பதற்கு கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

அதாவது உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் அதிகமாக தமிழக மாணவர்கள் தங்கியிருப்பதால் அவர்களை ரஷ்ய நாட்டின் எல்லை வழியாக அழைத்து வருவதற்கு மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலமாக தொடர்ந்து தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழக மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து அவர்களை மீட்டு தமிழகம் அழைத்து வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அவர்களுக்கு தெரிவித்து வழி நடத்தி அழைத்து வர வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான ஹங்கேரி, போலந்து, ருமேனியா, சுலோவாக்கியா, உள்ளிட்ட நாடுகளில் தற்காலிகமாக அடைக்கலம் புகுந்திருக்கும் தமிழக மாணவர்களை உடனடியாக சிறப்பு விமானங்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழக மாணவர்களை விரைவாக அழைத்து வருவதற்கு ஏற்றவாறு மேற்படி நாடுகளுக்குச் சென்று அங்கே இந்திய தூதரகங்கள் மூலமாக ஒருங்கிணைந்து போதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்க தமிழகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம் எம் அப்துல்லா மற்றும் டிஆர்பி ராஜா சட்டசபை உறுப்பினர் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களுடன் 4 ஐ ஏ எஸ் அதிகாரிகளும் இணைந்து ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் தெரிகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.