தடுப்பூசி போடுங்க ப்ரீ தக்காளி வாங்கிட்டு போங்க! சூப்பர் டெக்னிக்!
கொரோனா தொற்றானது சென்ற வருடம் பரவி இந்த வருடம் கொரோனா 2- வது அலையாக உருமாறி பெருமளவு மக்களை பாதித்து வருகிறது.தற்போது உலகளவில் 14.26 கோடி பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.அதுமட்டுமின்றி கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசாங்கமும் பல நடவடிக்கைகள் செயல்படுத்தி வருகின்றனர்.கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும் மக்கள் யாரும் தடுப்பூசி போட முன்வரவில்லை.ஏனென்றால் அத்தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது.
தற்போது கொரோனா தொற்று பலி எண்ணிக்கையும் 30 லட்சத்தை தாண்டியுள்ளது.அதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட முன் வர வேண்டும் என்பதற்காக அரசியல் தலைவர்களே தங்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களையும் போடும் படி வலியுறுத்தினர்.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசி திருவிழா என பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.45 வயதுக்கு மேற்பட்டோர் அத்திருவிழாவில் கலந்துக்கொண்டு தடுப்பூசி போடும்படி கூறினார்.மக்களிடம் அதிக அளவு எடுத்துரைத்தும் தடுப்பூசி போட முன்வராததால்,சத்தீஸ்கர் மாநிலம் புது வித டெக்னிக்கை யூஸ் செய்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் தக்காளியை இலவசமாக தந்து கொரோனா தடுப்பூசி போட மக்களை அழைக்கின்றனர்.ப்ரீ தக்காளிக்காக மக்கள் மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர்.மக்களுக்கு தருவதற்கு போதிய தக்காளிகளை வியாபாரிகள் நகராட்சிக்கு தரவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அம்மாநிலத்தில் ப்ரீ தக்காளி,போட்டுக்கோ தடுப்பூசி என வலைத்தளங்களில் டிரெண்டிங்காக பரவி வருகிறது.அரசு ஊழியர்கள் எடுத்த இந்த யோசனைக்கும் பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.