பாதியில் தரையிறங்கிய GO FIRST விமானம்!! பயணிகள் அவதி!!
GO FIRST விமான நிறுவனம் 6.9%பங்குகளுடன் விமான போக்குவரத்து சந்தையில் இந்தியாவில் ஐந்தாம் இடத்தில் இருகக்கிறது.இந்த நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக திவால் அறிவிப்பு அறிக்கையை தேசிய நிறுவன தீர்ப்பாயத்திட்டம் வழங்கியுள்ளது.இதையடுத்து அந்த நிறுவனமே இன்று முதல் மே 5 ஆம் தேதி வரை GO FIRST நிறுவனம் செயல்படாது என அறிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று மும்பைக்கு ஸ்ரீ நகர் மற்றும் டெல்லியிலிருந்து சென்ற GO FIRST விமானங்கள் தீடீரென குஜராத்தில் உள்ள சூரத் விமான நிலையத்தில் தரையிறங்கியது.எனவே பயணிகள் பெரும் சிக்கலுக்கு ஆளானர்கள் அதன் பின் அங்கிருந்து விமானம் கிளம்பியது. மேலும் இவ்வாறு விமானம் அவசரமாக தரையிரங்கிய காரணம் சரிவர தெரியவில்லை என கூறியுள்ளது.