சச்சினின் சாதனையை முறியடித்த கோலி!! சர்வதேச போட்டியில் சதம்!!
வேஸ்ட் இண்டீஸ் கு எதிரான போட்டியில் விராட் கோலி தனது 500-வது சர்வதேச போட்டியில் சதம் அடித்து அசத்தி உள்ளார்.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்க்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெய்ட் முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸ் தொடங்கி விளையாடி வருகிறது. இதில் முதல் நேர ஆட்ட முடிவில் இந்திய அணி 84 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 288 ரன்கள் எடுத்து இருந்தது. விராட் கோலி 87 ரன்களும், ஜடேஜா 36 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இதையடுத்து 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் விராட் கோலி மற்றும் ஜடேஜா இருவரும் நிலைத்து விளையாடி ரன்கள் குவித்தனர். விராட் கோலிக்கு இது 500-வது சர்வதேச ஆட்டம் ஆகும். இதில் அவர் சதம் அடித்து அசத்தினார். இதனால் 500வது சர்வதேச போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சரித்திர சாதனையை விராட் கோலி படைத்தார். இறுதியில் 128 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 438 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சில் ஆல் அவுட்டானது.
பின்னர் தனது முதல் இன்னிங்க்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் 41 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து உள்ளது. பிராத் வெயிட் 37 ரன்களும், மெக்கென்சி 14 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
500 -வது சர்வதேச போட்டியில் சதம் அடித்ததின் மூலம் விராட் கோலி சச்சின் சாதனையை முறியடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டிகளின் முடிவில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை அவர் உடைத்து புதிய சாதனையை படைத்தார்.
500 போட்டிகள் முடிவில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியல்:-
1. விராட் கோலி : 76
2. சச்சின் டெண்டுல்கர் : 75
3. ரிக்கி பாண்டிங் : 68
4. ஜேக் காலிஸ் : 60