ஆடு வளர்ப்பவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க.. 50% மானியத்துடன் மத்திய அரசு வழங்கும் 2,00,000 லட்சம்!! 

0
148
Goat breeders apply immediately.. 2,00,000 with 50% subsidy given by central government!!
Goat breeders apply immediately.. 2,00,000 with 50% subsidy given by central government!!

ஆடு வளர்ப்பவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க.. 50% மானியத்துடன் மத்திய அரசு வழங்கும் 2,00,000 லட்சம்!!

விவசாயிகள் முதல் சாதாரண மக்கள் வரை ஆடுகள் வளர்ப்பில் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.ஆடு வளர்ப்பு பற்றி தெரியவர்கள் கூட இன்று லட்சங்களில் லாபம் பார்த்து வருகின்றனர்.நம் நாட்டில் மற்ற இறைச்சிகளின் விலையை காட்டிலும் ஆட்டிறைச்சியின் விலை சற்று அதிகமாக இருக்கிறது.பண்டிகை காலங்களில் சொல்ல வேண்டியதில்லை.ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.1000த்தையும் தாண்டி விற்கும்.இதன் காரணமாக பலரும் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆடு வளர்ப்பை ஊக்குவிக்க மத்திய அரசு சிறப்பான திட்டம் ஒன்றை செயல்பட்டிற்கு கொண்டு வந்திருக்கிறது.தேசியக் கால்நடை ஆணையத்தின் கீழ் செம்மறி ஆடு வளர்ப்பிற்கு 50% மானியம் வழங்குகிறது.விவசாயிகள் விவசாயத்துடன் சேர்த்து கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு லாபம் பார்க்க வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு கீழ் 100 முதல் 500 ஆண்டுகள் வரை வளர்க்க முடியும்.100 ஆடுகள் வளர்ப்பிற்கு 2,00,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.அது மட்டுமின்றி இருமுறை ரூ.5,00,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அதேபோல் 200 ஆடுகளுக்கு ரூ.40 லட்சம்,300 ஆடுகளுக்கு ரூ.60 லட்சம்.400 ஆடுகளுக்கு ரூ.80 லட்சம் மற்றும் 500 ஆடுகளுக்கு ரூ.1 கோடி வரை 50% மானியத்துடன் வழங்கப்படுகிறது.

ஆடு வளர்ப்பு திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?

உத்யம் மித்ரா என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

ஆடு வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற இருக்க வேண்டிய தகுதிகள்:

1)பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் ஆடு வளர்ப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

2)விண்ணப்பம் செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.

3)சொந்த நிலம் இல்லாதவர்கள் 10 ஆண்டுகளுக்கு நிலத்தை குத்தகை எடுத்து ஆடுகளை வளர்க்கலாம்.

4)விவசாயிகளை தவிர கைம்பெண்கள்,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்,ஆதரவற்ற பெண்கள்,வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த திட்டதிற்கு விண்ணப்பம் செய்ய தகுதியானவர்கள்.

ஒருவேளை உங்கள் நிலத்தின் மீது கடன் இருந்தாலும் கிசான் கிரெடிட் இயங்கினாலும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.