இனி தமிழ்நாடு முழுக்க ஆட்டு இறைச்சி ஒரே விலை தான்!! தமிழக அரசு திடீர் அறிவிப்பு!!

0
54
Goat meat is the same price all over Tamil Nadu!! Tamil Nadu Government Sudden Announcement!!
Goat meat is the same price all over Tamil Nadu!! Tamil Nadu Government Sudden Announcement!!

Tamilnadu Gov: இனி தமிழகம் முழுவதும் ஒரே விலையில் ஆட்டு இறைச்சியை விற்பனை செய்ய புதிய இணைத்தளம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இதன் மூலம் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு பரஸ்பர உறவு இருப்பதோடு வெளிப்படையான விலையையும் தெரிந்து கொள்ள முடியும். அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்டு இறைச்சியின் விலையானது மாறுபட்டு காணப்படுகிறது. குறிப்பாக ஆட்டை விலை கொடுத்து வாங்குவது, டிரான்ஸ்போர்ட் என பல விலைகளை உள்ளடக்கி தான் நிர்ணயிக்கப்படுகிறது.

இதனால் ஒரு சில தினங்களில் ஆயிரம் ரூபாய் வரைக்கும் மாற்று நாட்களில் ₹800 வரைக்கும் விற்கப்படுகிறது. இதனை சமரசப்படுத்த தற்போது புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி அதில் ஆட்டு இறைச்சியின் விலையை நிர்ணயிக்கும் முறையை தமிழக அரசு கொண்டு வருவதாக கூறியுள்ளது. இது ரீதியான அறிவிப்பை கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து இது குறித்து அவர் பேசுகையில், கூடிய விரைவிலேயே ஆட்டு இறைச்சி விலையை தெரிந்து கொள்ளும்படி இணையதளம் வெளியாகும். இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேறுபட்டு காணப்படும் விலையை ஒழுங்குபடுத்த முடியும். மேற்கொண்டு இந்த ஆட்டு இறைச்சி விலை தினம்தோறும் மாற்றமும் செய்யப்படும். அதேபோல இந்த இணையத்தில் வெளியிடப்படும் விலையில் தான் கடைகளில் ஆட்டு இறைச்சியை விற்கிறார்களா என்பது குறித்து கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த புது முயற்சியானது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த புதிய செயலி மூலம் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆட்டு இறைச்சியை ஒரு போல விலையில் வாங்கி பயன்பெற முடியும்.

Previous articleகனிமொழிக்கு ப்ரோமோஷன்; உதயநிதிக்கு முக்கிய பதவி..ஸ்டாலின் போடும் கணக்கு!
Next articleமகளிர் உரிமை தொகையில் இனி இவர்களும் சேரலாம்; அரசு வெளியிட்ட அறிவிப்பு!