4 மணி நேரத்தில் 4 கோடிக்கு விற்கப்பட்ட ஆடுகள்!

Photo of author

By Parthipan K

4 மணி நேரத்தில் ஆடுகள் நான்கு கோடிக்கு இன்று விற்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஆடுகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன. மற்ற இறைச்சிகளை விட ஆட்டிறைச்சி அதிக விலையிலேயே விற்கப்படும்.

ஆடுகள் கிராமப்புறங்களில் வளர்க்கப்பட்டு அயல்நாடு வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மற்ற நாட்களில் பிராய்லர் கோழி இறைச்சிகளை சாப்பிடுபவர்கள் கூட விசேஷ நாட்களில் ஆட்டிறைச்சி வாங்கி சமைக்கவே விருப்பப்படுவர்.

கோவில்களில் கிடா வெட்டப்படும் படும் வழக்கம் நம்மிடம் காலம் காலமாகவே உள்ளது.

இந்த நிலையில் தீபாவளி நாளன்று ஆட்டிறைச்சி விலை மிகவும் அதிகமாவே விற்கப்படும்.

தீபாவளி நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஆடுகளை வாங்க வார சந்தையில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் கூட்டம் அலைமோதுகின்றது.

கடலூர் மாவட்டம் வேப்பம்பூர் ஆடு சந்தையில் ஆடுகளை வாங்க இன்று சந்தை கூடியது.

அதிகாலை நான்கு மணிக்கு ஆரம்பித்த ஆட்டு சந்தை காலை எட்டு மணியளவில் முடிந்துவிட்டது.

ஆனால் இந்த நான்கு மணி நேரத்தில் விற்கப்பட்ட ஆடுகளின் மொத்த விலை நான்கு கோடி.

தீபாவளி நெருங்கி கொண்டிருப்பதை அடுத்து ஆடுகள் இப்படி நான்கு மணி நேரத்தில் நான்கு கோடிக்கு விற்கப்பட்டு இருக்கிறது.

கடலூர் மாவட்டம் வேப்பம்பூர் ஆட்டு சந்தையில் இது வரை அதிகமாக விற்கப்பட்ட விலை இதுவாகும்.