முன்னாள் முதல்வருக்கு காட்சி கொடுத்த கடவுள்! கட்சியை பற்றிய முக்கிய தகவல்!

Photo of author

By Rupa

முன்னாள் முதல்வருக்கு காட்சி கொடுத்த கடவுள்! கட்சியை பற்றிய முக்கிய தகவல்!

சட்டமன்ற தேர்தல் என்ற ஒன்று நடைபெற ஆரம்பித்தாலே அந்தந்த மாநிலங்களில் பல சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும். அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

அதேபோல யார் ஆட்சிக்கு வருவார் என்ற முன் கணக்கெடுப்பும் எடுக்கப்படும். அதனால் சட்டமன்றத் தேர்தலானது பரபரப்பாக காணப்படும்.  அந்தவகையில் உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் தற்பொழுது ஓர் புதிய செய்தியை மக்களிடம் கூறியுள்ளார்.

அது என்னவென்றால், அவரது கனவில் தினந்தோறும் கிருஷ்ணர் தோன்றி இம்முறை உத்தரப்பிரதேசத்தில் ராமராஜ்யம் அமையப் போகிறது என்று கூறுகிறாராம். அதாவது கிருஷ்ணர் தினமும் அகிலேஷ் யாதவ் கனவில் தோன்றி இம்முறை சமாஜ்வாதி கட்சித் தலைமை அமையப்போகிறது இன்று தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

ராமராஜன் என்றால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்பதே அதனால் ராமராஜ்யம் அமையும் என்று கிருஷ்ணர் கூறுகிறார். அதுமட்டுமின்றி யோகி ஆதித்யநாத் கட்சி ஆளுமை ஆனது இம்முறை தோல்வியை சந்திக்கும் என்பதையும் கிருஷ்ணர் தெரிவித்ததாக  கூறியுள்ளார்.

மேலும் மக்கள் கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சி அதிக குற்றங்களை செய்து உள்ளதாக கூறுகிறது. ஆனால் பார்க்கும் பொழுது அதிக குற்ற வழக்குகள் தற்பொழுது உத்தரப்பிரதேச ஆளும் ஆதித்யநாத் மீது தான் அதிக அளவு உள்ளது என்று தெரிவித்தார்.

இவர்கள் செய்த குற்றங்களை சுத்தம் செய்ய பாஜக ஒரு பெரிய வாஷிங்மெஷினை தான் கொண்டு வரவேண்டும் என்றும் விமர்சனம் செய்தார். பாஜக கொடிகட்டிப் பறப்பதற்கு பல்வேறு தலைவர்கள் தங்களது ரத்தத்தை உழைப்பாக சிந்தியுள்ளனர். ஆனால் திடீரென்று வந்த யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் ஆகிவிட்டார்.

இது அவர் கட்சிக்கு செய்யும் பெரிய துரோகம். அதுமட்டுமின்றி யோகி ஆதித்யநாத் மக்களிடம் பொய்யான வாக்குகளையே அளிக்கிறார். பாரம்பரியமாக உள்ள பல ஊர்களின் பெயர்களை மாற்றிவிட்டார். அது மிகவும் குற்றத்திற்கு உரிய செயல் எனம் அகிலேஷ் யாதவ் மக்கள் முன்னிலையில் கூறியுள்ளார்.