இந்த செயல்களை செய்யவா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார்! பிரதமர் மோடியை சீண்டிய மம்தா பானர்ஜி!

Photo of author

By Sakthi

இந்த செயல்களை செய்யவா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார்! பிரதமர் மோடியை சீண்டிய மம்தா பானர்ஜி!

Sakthi

God will send someone to do these things! Mamata Banerjee scolded Prime Minister Modi!
இந்த செயல்களை செய்யவா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார்! பிரதமர் மோடியை சீண்டிய மம்தா பானர்ஜி!
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் இது போன்ற செயல்களை செய்யவா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார் என்று பிரதமர் மோடி அவர்களை பற்றி பேசியுள்ளார்.
இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. தற்பொழுது வரை 5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளது. இன்று(மே25) 6ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 7 மற்றும் கடைசி கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ளது.
இதையடுத்து தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மதுராப்பூரில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கலந்து கொண்டு பேசினார்.
அந்த தேர்தல் பிரச்சாரத்தில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் “நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் பாஜக இருக்கின்றது. அந்த பயத்தில் பாஜக தலைவர்கள் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுகிறார்கள்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒருவர் தன்னைத் தானே கடவுளின் குழந்தை என்று கூறுகிறார். அவரை பார்த்து நான் கேட்கிறேன். கடவுள் வந்து கலவரத்தை உருவாக்கத்தான் உங்களை அனுப்பினாரா? விளம்பரங்கள் மூலமாக போய் நீங்கள் பொய்களை பரப்புங்கள் என்று கூறி கடவுள் உங்களை அனுப்பினாரா?
இல்லை என்.ஆர்.சியை நடைமுறைப்படுத்துகிறேன் என்று கூறி மக்களை சிறையில் அடைத்து வை என்று கூறி கடவுள் உங்களை அனுப்பினாரா? இல்லை 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை நிறுத்திவைக்கத்தான் கடவுள் உங்களை அனுப்பினாரா?
அல்லது கிராமப்புற வீடுகட்டும் பணிகளை தடுக்கவா கடவுள் உங்களை அனுப்பி வைத்தார்? அல்லது மக்களின் வங்கி கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்பதை கூடவா கடவுள் வேண்டாம் என்று சொன்னார்? இத்தகைய செயல்களை எல்லாம் கடவுள் செய்ய மாட்டார்” என்று அவர் பேசினார்.