திடீரென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

0
194

திடீரென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.தொடர்ந்து உச்சத்தை எட்டி வந்த தங்கமானது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைய தொடங்கிய தங்கத்தின் விலையானது இன்று ஏறுமுகமாக ஏறியுள்ளது. ஒரு கிராம் 4,954 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில் இன்று ஆட்டம் காட்டி மறுபடியும் ஏறியுள்ளது. இன்று கிராமிற்கு 27 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 216 ரூபாய் அதிகரித்து விற்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.27 அதிகரித்து ரூ.4954-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.216 அதிகரித்து ரூ.39632-க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 ரூபாய் அதிகரித்து ரூ.5202 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.232 அதிகரித்து ரூ.41616-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை‌ இன்று ஒரே அடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ரூ. 3.70 அதிகரித்து ஒரு கிராம் 75.10-விற்க்கும், ஒரு கிலோ ரூ.75100 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

படிப்படியாக குறைந்து வரும் தங்கத்தை கண்ட மக்கள் மகிழ்ச்சி கண்ட நிலையில் ஆட்டம் காட்டி தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. மீண்டும் உயர பறக்கும் தங்கத்தை எட்டி பிடிப்பார்களா ஏழை மக்கள்.

 

 

Previous articleதனிஒருவன்2 படத்தின் வில்லன் கதாபாத்திரம் யாருக்கு? குழப்பத்தில் படக்குழுவினர்
Next articleகுப்பையில் தாமரையை மலர வைக்கும் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு? அதிமுக பிரமுகர் ஒருவரும் பாஜகவில் இணைய திட்டம்!!