மீண்டும் தங்கம் விலை குறைவு: மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் 

Photo of author

By Anand

மீண்டும் தங்கம் விலை குறைவு: மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்

சமீப காலமாக தங்கத்தின் விலையானது ஏற்றம் இறக்கமாகவே காணப்படுகிறது.அந்த வகையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது.

தங்கம் விலை:

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ரூ.4,658-க்கு விற்பனையாகிறது. அந்தவகையில் சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.37,264-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலையானது  8 கிராம் ரூ.40,480- க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை ரூ.1.குறைந்து ரூ.60.70-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.60,700 ஆக உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கமானது 9.1 சதவீதமாக உயர்ந்து விட்டது. இவ்வாறு தொடர்ந்து அதிகரி்த்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கெனவே இருமுறை வட்டிவீதத்தை உயர்த்திவிட்டது. இந்நிலையில் இந்த மாத இறுதியில் மீண்டும் 100 புள்ளிகள் வரை வட்டியை உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் மீண்டும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் டாலரின் மதிப்பு உயர்ந்து இந்தியா உள்ளிட்ட மற்ற நாட்டுக் கரன்சிகளின் மதிப்பானது குறைய வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் அனைவரும் பாதுகாப்பு மற்றும் லாப நோக்கம் கருதி தங்கத்தில் முதலீடு செய்வதை விட டாலரில் முதலீடு செய்வது அதிகரிக்கும்.

The price of gold will continue to rise! Today's gold price!
The price of gold will continue to rise! Today’s gold price!

மேலும் தங்கள் நாட்டு கரன்சி மதிப்பை கட்டுக்குள் வைத்துக் கொள்ள டாலரில் வாங்கும் தங்க இறக்குமதியில் கட்டுப்பாடு விதித்துள்ளது. அந்தவகையில் தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மீதான சுங்க வரி 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வரி உயர்த்தப்பட்டதால் கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. மேலும் இது போன்ற கட்டுப்பாடுகளால் சர்வதேச அளவில் தங்கத்திற்கான தேவை குறைந்து மேலும் விலை சரியவும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.