தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றம்? தொடர்ந்து உயருமா குறையுமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தங்கத்தின் விலையானது ஏற்றம் இறக்கமாகவே காணப்படுகிறது.இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஏற்றம் இறக்கமாக காணப்பட்ட தங்கத்தின் விலையானது இன்று ஏற்றம் கண்டது. ஆனால் இந்த விலையேற்றமானது ஒருநாள் மேலும் தாக்கு பிடிக்கமா.
இன்று தங்கத்தின் விலையானது கிராமுக்கு 23 ரூபாயும் சவரனுக்கு 184 ரூபாயும் விலை உயர்ந்து விற்பனையாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,802 க்கும், சவரன் ரூ.38,416 க்கும் விற்பனையானது .
அதே நேரத்தில் இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு ரூ.23 விலை உயர்ந்து தற்போது ரூ.4,825 ஆகவும், மேலும் சவரனுக்கு ரூ.184 உயர்ந்து தற்போது 1 சவரன் ரூ.38,600 க்கும் விற்பனையாகி வருகிறது.
சென்னையை போலவே மற்ற மாநகரங்களான கோவை, திருச்சி மற்றும் வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,825 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.இந்த வாரத் தொடக்கத்திலிருந்து தங்கம் விலை கடும் ஏற்ற இறக்கத்துடன் நகர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை சரிந்தும், அதே நேரத்தில் இரு நாட்களாக விலை அதிகரித்தும் இருக்கிறது. ஏறக்குறைய கிராமுக்கு 30 ரூபாயிலும், சவரனுக்கு 240 ரூபாயிலும் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்து வருகிறது.
தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 பைசா அதிகரித்து, ரூ.63.20 ஆகவும், கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.63,200 க்கும் விற்பனையாகி வருகிறது.
தற்போதைய சூழலில் தங்கம் விலையானது இனிமேல் படிப்படியாக அதிகரிக்குமா அல்லது மேலும் விலை குறையுமா என்று ஊகிக்க முடியாத அளவில் விலையில் ஏற்ற இறக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது.