அடடே தங்கம் விலை சர சரன்னு குறைஞ்சிடுச்சே!! மக்களே உடனே நகைக்கடைக்கு விரையுங்கள்!!
மார்ச் மாதத்தில் இருந்து போக்கு காட்டி வரும் தங்கம் விலையால் சாமானியர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.இந்தியாவில் தங்க ஆபரணங்களுக்கு என்று தனி மதிப்பு இருக்கிறது.பெண்கள் அதிகம் விரும்பும் தங்கம் கடந்த இரு மாதங்களாக புதிய உச்சம் தொட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.47,000 என்று இருந்த நிலையில் அதன் பின்னர் மளமளவென உயர்ந்து ரூ.55,000 வரை விற்பனையானது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக அதன் விலை இறக்கத்தில் இருந்து வருகிறது.
சென்னையில் நேற்று 1 கிராம் ரூ.6,730க்கும் 1 சவரன் ரூ.53,840க்கும் விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு ரூ.20 குறைந்து 1 கிராம் ரூ.6,710க்கும் சவரனுக்கு ரூ.160 குறைந்து 1 சவரன் ரூ.53,680க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அதேபோல் 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.22 குறைந்து 1 கிராம் ரூ.7,320க்கும் சவரனுக்கு ரூ.176குறைந்து 1 சவரன் ரூ.58,560க்கும் விற்பனையாகின்றது.
மேலும் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.86க்கும் ஒரு கிலோ ரூ.86,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தொடர்ந்து தங்கம் விலை வீழ்ச்சியடைந்து வருவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.