மீண்டும் உயரத் தொடங்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை

Photo of author

By Parthipan K

பொருளாதார பாதிப்பால் தங்கம் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.கடந்த மாதம் 20ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூபாய். 37,616க்கு விற்க்கப்பட்டது.
கடந்த 18 நாட்களில் தங்கத்தின் விலை குறையாமல் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வந்தது.கடந்த 7ம் தேதி தங்கத்தின் விலை ரூபாய் 43 ஆயிரத்திற்கு மேல் சென்றது.
ஆனால் கடந்த நான்கு நாட்களில் தங்கத்தின் விலை சரிந்து கொண்டே வந்து இருந்தது.நேற்று நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய்.40,104க்கும்,ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5013க்கும் விற்பனை செய்யப்பட்டது.நேற்று மட்டுமே தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய்.1,832 குறைந்து விற்கப்பட்டது.கடந்த நான்கு நாட்களில் தங்கத்தின் விலை மட்டும் ரூ.2,400 குறைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ,தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய். 8 உயர்ந்து ரூ.40, 112 க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய்.1 அதிகரித்த ரூ.5,014க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் 80 பைசா உயர்ந்து விற்க்கப்பட்ட நிலையில் இன்று ரூ.76.10க்கு விற்கப்படுகிறது.நேற்று வெள்ளி ஒரு கிலோ ரூ.75,300க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.76,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.