தங்கம் மற்றும் வெள்ளி விலையானது தொடர்ந்து உயர்ந்து வருவதால் தங்கத்தை விரும்பும் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்பொழுது சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 38,000 கடந்து விற்பணை செய்யப்பட்டு வருகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவும் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் ஆபர தங்கத்தின் விலை சவரனுக்கு 34 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தங்கத்தின் விலையானது ஏற மற்றும் இறங்க என மாறி மாறி போய்க்கொண்டிருக்கிறது.மேலும் சென்னயில் தங்கத்தின் விலை சவரனுக்கு 36 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆகிகொண்டிருக்கிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 200 அதிகரித்து 37,080 ஆகவும், கிராமுக்கு ரூபாய் 45 அதிகரித்து 4,635 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.அதே போல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 48.51 ஆகவும் ,10 கிராம் ரூ.485.10 ஆகவும் ,1 கிலோ வெள்ளி 48,510 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தங்க நகைகளை விரும்புபவர்கள் ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கி விடமாட்டோமா என ஏங்கும் இல்லத்தரசிகள் உள்ளிட்ட நபர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.