சிறப்பாக பணியாற்றும் பணியாளர்களுக்கு தங்க நாணயம் பரிசு..! நகராட்சி ஆணையர் அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

இனி சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் அறிவித்தார்.

மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், புதுக்கோட்டை நகராட்சி சார்பில் “தூய்மை இந்தியா இயக்கம் தூய்மையே சேவை” என்ற நோக்கில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னர் விழாவில் பேசிய புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாட்சா,
தூய்மைப் பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். அதே நேரத்தில் அவர்கள் கவனமாகவும் பணிபுரிய வேண்டும் என்றும் கூறினார். இனி வரும் காலகட்டத்தில் சிறப்பாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார். நகராட்சி ஆணையரின் இந்த அறிவிப்பு தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.