தங்கநாணயம்,ரூ 2000 ஒரு ஓட்டிற்கு இவ்வளவு பணமா! கையும் களவுமாக சிக்கிய பாஜக!

Photo of author

By Rupa

தங்கநாணயம்,ரூ 2000 ஒரு ஓட்டிற்கு இவ்வளவு பணமா! கையும் களவுமாக சிக்கிய பாஜக!

சட்டமன்ற தேர்தலானது 5 மாநிலங்களில் நடக்கயிருக்கிறது.இந்தநிலையில் மக்களின் வாக்குகளை பெற பரப்புரை ஆற்றி வருகின்றனர்.அதுமட்டுமின்றி வாக்குகளை கவர அரசியல்கட்சிகள் பல நூதன முறைகளை கையாண்டு வருகின்றனர்.நாளை மறுநாள் வாக்கு பதிவு நடக்கயிருக்கும் நிலையில் கடன் இரு நாட்களுக்கு முன்பு மட்டும் ரூ.126 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் தற்போது புதுச்சேரியில் மோடி படத்துடன் ஒரு தங்கநாணயம்,ரூ.2000  விநியோகித்து வந்துள்ளனர்.இதனை அறிந்த போலீசார் அனைத்தயும் பறிமுதல் செய்தனர்.இந்த தகவல் புதுச்சேரி தேர்தல் களத்தில் பரபரப்பிற்கு உள்ளாக்கியது.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில் பாஜக வேட்பாளராக ஜி.என்.எஸ் ராஜசேகரன் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னால் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் போட்டியிடுகிறார்.என் காக்கிரஸில் கூட்டணியில் சீட்டு கிடைக்காததால் விரக்தியில் முன்னால் அமைச்சர் சிவா சுயேட்ச்சையாக போட்டியிடுகிறார்.இதற்கிடையில் பாஜகவில் அமமுக வேட்பாளர் தருபாரனியம் என்பவர் போட்டியிடுகிறார்.

அதிக அளவு வாக்குகளை கவர பாஜக வேட்பாளர் ஜி.என்.எஸ்  ராஜசேகரன் மோடி படம் போட்ட கவரில் தங்க நாணயம்,இரண்டாயிரம் பணம் என மொத்தம் முப்பாதாயிரம் வாக்காளர்களுக்கு கொடுத்து வந்துள்ளார்.இது தேர்தல் பறக்கும் படையினர் கண்டுபிடித்து 96 ஆயிரம் பணத்தையும் ,149 தங்க காயினையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதைப்பற்றி அந்த தொகுதி மக்களிடையே கேட்டபோது,இவர் எம்,எல்.ஏ ஆனால் பொதுமக்கள் அவரை நெருக்கிட முடியுமா.அவரது பண செல்வாக்கு அனைத்தும் மேல் தட்டு மக்களிடம் செல்லுபடியாகும்.ஆனால் எங்களை போல கீழ்தட்டு மக்களிடம் செல்லுபடியாகது என்றுக் கூறியுள்ளனர்.