தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

Photo of author

By Kowsalya

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே குறைந்துவருகிறது.

கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருந்த நிலையில் அனைத்தும் முடங்கிப் போய்க் கிடந்த நிலையில் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

தொடர்ந்து ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாகவே குறைந்து வருகிறது. இன்று கிராமிற்கு 25 ரூபாய் குறைந்தும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 200 ரூபாய் குறைந்தும் விற்கப்படுகிறது

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து
ரூ.5075-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.200 குறைந்து ரூ.40600-க்கு விற்கப்படுகிறது.


சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 ரூபாய் குறைந்து ரூ.5329 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலைரூ.208 குறைந்து ரூ.42632-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி கிராமிற்கு ரூ.0.40 குறைந்து ஒரு கிராம் 74.70-விற்க்கும், ஒரு கிலோ
ரூ.74700 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வந்த தங்கம்  சிறு சிறு அளவில் குறைந்து வருகிறது. இன்னும் ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவே தங்கம் பார்க்கப்படுகிறது.