மாயமான தங்க நகைகள்!! போலீசாரை நாடிய நடிகர் பார்த்திபன்!!

Photo of author

By Sakthi

Director Parthiban:இயக்குனர் பார்த்திபன் அலுவலகத்தில் தங்க நகைகள் மாயமாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் 90ட்டிஸ் காலகட்டத்தில் பிரபலமாக இருத்த நடிகர் தான் பார்த்திபன். நடிப்பு மட்டும் இல்லாமல் திரைப்பட இயக்குனர் என பல திறமைகளை கொண்ட படைப்பாளியாக இருந்து இருக்கிறார். இது மட்டுமல்லாமல் பாடல் எழுதுவது ,பாடுவது என பல தனித் திறமைகளை தன்னுள் கொண்டு உள்ளவர்.

இவரது ஒத்த செருப்பு என்ற படம்  இவரது திரைப்பட இயக்கம் திறைக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். சமீபத்தில் வெளியான “Teenz” மூவி மக்கள் இடத்தில் வரவேற்பை பெற்று இருந்தது.  மேலும்  இரவின் நிழல் படமானது சிங்கிள் டேக்கில் எடுக்கப்பட்ட படம் ஆகும். இவர் நடிப்பில் வெளியான அழகி படம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. மேலும் இவர் சமூக பிரச்சனைகளுக்கு அவ்வபோது குரல் கொடுத்து வருகிறார்.

மத்திய அரசின்  வந்தே பாரத் ரயிலில்  உணவு சரியில்லை என்று தான் புகார் அளித்துள்ளதாக அந்த புகாருடன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் தான்  நடிகர் பார்த்திபன் தனது அலுவலகத்தில் 12 சவரன் நகையை காணவில்லை என சென்னை சைதாப்பேட்டை
காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பார்த்திபனின் உதவியாளர், கிருஷ்ணாவிடம் மாயமான நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து நடிகர் பார்த்திபன் தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.