மீண்டும் மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு மறுபடியும் தங்கம் ஏறத் தொடங்கியுள்ளது. கிராம் ஒன்றுக்கு 4,964 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில் ஆட்டம் காட்டி மறுபடியும் கடந்த சில தினங்களாக ஏறியுள்ளது. இன்று கிராமிற்கு 17 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 136 ரூபாய் அதிகரித்து விற்கப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.27 அதிகரித்து ரூ.4964-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.136 அதிகரித்து ரூ.39712-க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 ரூபாய் அதிகரித்து ரூ.5213 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.144 அதிகரித்து ரூ.41704-க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை இன்று ஒரே அடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ரூ. 2.30 அதிகரித்து ஒரு கிராம் 76.70-விற்க்கும், ஒரு கிலோ ரூ.76700 க்கும் விற்கப்பட்டு வருகிறது.
படிப்படியாக குறைந்து வரும் தங்கத்தை கண்ட மக்கள் மகிழ்ச்சி கண்ட நிலையில் ஆட்டம் காட்டி தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. மீண்டும் உயர பறக்கும் தங்கத்தை எட்டி பிடிப்பார்களா ஏழை மக்கள்.