தங்கத்தின் விலை சரமாரியாக சரிவு! மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்த தங்கம்!

Photo of author

By Kowsalya

தங்கத்தின் விலை சரமாரியாக சரிவு! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்!

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது.

கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருந்த நிலையில் அமெரிக்க டாலரின் விலை மிகவும் குறைந்த நிலையில் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது.

தொடர்ந்து ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களாக குறைந்து வருகிறது. இன்று கிராமிற்கு 123 ரூபாய் குறைந்தும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 900 ரூபாய் மேல் குறைந்தும் விற்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.123 குறைந்து ரூ.5242-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.984 குறைந்து ரூ.41936-க்கு விற்கப்படுகிறது.

 

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.129 ரூபாய் குறைந்து ரூ.5504 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலைரூ.1032 குறைந்து ரூ.44032-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி கிராமிற்கு ரூ.0.60 குறைந்து ஒரு கிராம் 82.80-விற்க்கும், ஒரு கிலோ ரூ.82800 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

சற்று குறையத் தொடங்கிய தங்கத்தின் விலையை கண்டு மக்கள்  மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.