தங்கத்தின் விலை குறைவு! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்

Photo of author

By Anand

தங்கத்தின் விலை குறைவு! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்

கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து ஏறு முகமாக சென்று கொண்டிருந்த தங்கத்தின் விலையானது தற்போது சற்றே இறங்க தொடங்கியுள்ளது. இது பொது மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக தொடரும் பொருளாதார மந்தநிலை மற்றும் தொழில்துறை தேக்கத்தால் உலகம் முழுவதுமுள்ள பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி திரும்பி வருகின்றனர். அந்தவகையில் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பல்வேறு துறைகளில் செய்திருந்த தங்களுடைய மற்ற முதலீடுகளையெல்லாம் எடுத்து தற்போது தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

இவ்வாறு உலகம் முழுவதும் பொருளாதார பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது அதனால் அதன் விலையம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இதனால் ஆபரண தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் ஒரு கிராம் தாக்கமானது 4 ஆயிரம் ரூபாய்க்கும் மேலும், அடுத்ததாக ஒரு சவரன் தாக்கமானது 32 ஆயிரம் ரூபாய்க்கும் மேலும் விலையுயர்ந்து விற்பனையாகி வருகிறது.

இவ்வாறு தொடர்ந்து தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கங்கள் நிலவி வரும் சூழ்நிலையில் இன்று தங்கத்தின் விலயானது சற்றே குறைந்துள்ளது.ஆபரணத் தங்கத்தின் விலையானது ஒரு கிராமுக்கு 32 ரூபாய் குறைந்து 4132 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல் ஒரு சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து தற்போது 33056 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

இவ்வாறே 24 காரட் சுத்த தங்கத்தின் விலையானது 8 கிராம் 34712 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போல வெள்ளியின் விலையும் கிராமுக்கு 90 பைசா குறைந்து தற்போது 48.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.இவ்வாறு தொடர்ந்து ஏறு முகத்தில் சென்று கொண்டிருந்த தங்கத்தின் விலையானது சற்றே குறைய ஆரம்பித்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.