Gold News: ஆபரண தங்கம் விலை தொடர்ந்து 5-வது நாளாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. மேலும் தங்கம் விலை கடந்த ஐந்து நாட்களில் மற்றும் சுமார் ரூ.2,320 உயர்ந்துள்ளது.
தங்கம் வாங்கும் கனவை மக்கள் இனி நினைத்து கூட பார்க்க முடியாது என்ற அளவிற்கு, நாளுக்கு நாள் விலை எகிறி கொண்டே செல்கிறது. இதனால் நகை பிரியர்கள் வேதனையில் உள்ளார்கள். ஆபரணம் தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது.
அந்த நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,225-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாகவே வெள்ளி விலையில் எந்த ஒரு மாற்றமும் இன்றி ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் கடந்த மாதம் 30-ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் சுமார் ரூ.59,000-த்தை தாண்டி விற்பனை செய்து நகை பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த நிலையில் நேற்று ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,160-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த 20ஆம் தேதி ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 மற்றும் ஒரு பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.56,920 -க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்படி தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.