கிடு கிடுவென உயரும் தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

நாடுமுழுவதும் கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தொழிற்சாலைகள் மற்றும் சில நிறுவனங்கள் மூடியுள்ளனர்.

பொருளாதாரம் குறைந்து வரும் நிலையில் , நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து கொண்டே இருக்கின்றன.சர்வதேச அளவில் தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடு அதிகரித்திருப்பதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கடை ஊழியர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக திருமணம் உள்ளிட்ட எந்தவித சுப நிகழ்ச்சிகளும் எளிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது.தங்கத்தின் இறக்குமதி குறைவாக இருப்பதால், வர்த்தக வரலாற்றில் இல்லாத அளவில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.74 உயர்ந்து ரூ.4,978ஆகவும், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.592 அதிகரித்து ரூ. 39,824க்கும் வர்த்தக நிலவரப்படி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதைபோலவே, வெள்ளி விலையும் அதிகரித்தே இருந்து வருகிறன.நாடு முழுவதும் கொரோரை பாதிப்பு உச்சம் பெற்று வரும் நிலையில், தங்க விலையை உச்சம் பெற்று கொண்டே வருகிறது.

Leave a Comment