கேரளா தங்க கடத்தல் கும்பலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு. விசாரணையில் வெளிப்பட்ட பகிரங்க தகவல்.

0
63

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கடந்த 5-ம் தேதி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார் என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.சரித் குமார் அளித்த தகவலின்படி, முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸவப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்தனர்.

இதில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரக தூதரத்தின் முன்னாாள் ஊழியர் ஆவார். மேலும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் விற்பனை மேலாளராகாக ஒப்பந்த அடிப்படையில் இருந்தபோதுதான் இந்த குற்றச்சாட்டில் சிக்கினார்.

இந்த வழக்கில் கேரள மாநில முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது..

கொச்சியில் உள்ள தேசிய பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணைக்காக அவர் இன்று ஆஜரான இந்நிலையில் தங்கக்கடத்தல் கும்பலை சேர்ந்த ரமீஸ் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இவர் மூலம் அந்த அமைப்புக்கு கடத்தல் கும்பல் நிதியுதவி அளித்ததும் தெரியவந்துள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாக வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

author avatar
Kowsalya