ஜெட் வேகத்தில்  ஏறிய தங்கம் விலை! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

0
167

ஜெட் வேகத்தில்  ஏறிய தங்கம் விலை! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

தங்கத்தின் விலை ஆனது மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதும் என இருந்து வந்தது.  இந்நிலையில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை     ரூ.40,528 க்கு விற்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

இதனை அடுத்து புது வருடம் பிறந்த நிலையில் தங்கத்தின் விலை 42 ஆயிரத்து நெருங்கியதால் பொதுமக்களை கடும் அதிர்ச்சியடைய செய்து கவலைக்குள்ளாக்கியது.  டிசம்பர் மாத கடைசியில் நான்கு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 312 உயர்ந்துள்ளது. இதனை அடுத்து புத்தாண்டு பிறந்து நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு தங்க நகையின் விலை மேலும் உயர்ந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 31ஆம் தேதி சவரன் ரூ 41,040 க்கு விற்பனையாகி 28 மாதங்களுக்குப் பிறகு தங்கத்தின் விலை 41 ஆயிரத்தை கடந்தது. புத்தாண்டு அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

ஒரு நாள் விடுமுறைக்கு பின் தொடங்கிய தங்கம் மார்க்கெட் விலை இந்த இரண்டு நாட்களாக அதிகரித்து காணப்பட்டது.  நேற்று ஒரே நாளில் தங்கம் கிராமுக்கு ரூ.41  உயர்ந்து ஒரு கிராம் ரூ 5191 க்கும் ஒரு சவரன் ரூ.41,528 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 136 விலை ஏறி ரூ 41,664 விற்கப்படுகிறது. ஒரு கிராமின் விலை ரூ 5208  ரூபாயாக விற்கப்படுகிறது.

வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து கிராம் ரூ 75க்கு விற்கப்படுகிறது. கிலோவுக்கு ரூ 500 குறைந்து கிலோ 75000 என விற்கப்படுகிறது. தற்போது வரும் மாதங்களில் கல்யாண சுபமுகூர்த்த தினங்கள் பண்டிகைகள் வருவதால் நகைகள் வாங்க காத்திருந்த மக்களுக்கு இந்த விலை உயர்வு கடும் அதிர்ச்சியோடு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇறைச்சியில் புழுக்கள்! ஹோட்டல் உரிமையாளருக்கு நோட்டீஸ்! உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை!
Next articleஇனி இந்த எண்ணிற்கு  வாட்ஸ் அப் செய்யுங்ககள் போதும்! அரசு வெளியிட்ட புதிய வசதி!