மீண்டும் சற்று உயர்ந்த தங்கம் விலை!! இன்றைய நிலவரம்!!

0
166
Gold price slightly higher again!! Today's situation!!
Gold price slightly higher again!! Today's situation!!

Gold News: தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாக விலை குறைந்து வந்தது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.

தங்கம் விலை இந்த மாதத்தில் கடந்த சில தினங்களாக சரிவை நோக்கி சென்றது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். இனிமேல் தொடர்ந்து தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அதை உடைத்தெரியும் வகையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.55,560-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,945-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நான்கு நாட்களுக்கு பிறகு சற்று உயர்ந்துள்ளது மக்களிடையே மீண்டும் விலை உயர்ந்து விடும் என்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வெள்ளி விலையில் எந்த ஒரு மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சம் பெற்றது. இதனால் தங்கத்தின் விலை அன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக அதாவது இந்த மாதம் 11-ஆம் தேதி சவரனுக்கு ரூ.55 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.57,760க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல் கடந்த 12 ஆம் தேதி ஒரு சவரனுக்கு ரூ.1,080 குறைந்து விற்பனை செய்யப்பட்டது. 13 ஆம் தேதி ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.56,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.55,480 க்கு விற்பனை செய்யப்பட்டது.

Previous articleபுதிதாக வீடு கட்டுபவரா நீங்கள் இதை மிஸ் பண்ணிடாதீங்க!! மின்சார வாரியம்  அதிரடி அறிவிப்பு!!
Next articleIPL ஏலத்தில் இதுவரை இல்லாத புதிய மாற்றம்!! இனிமேதான் ஆட்டம் ஆரம்பம் குஷியில் ரசிகர்கள்!!