இன்று(ஜூலை 16)தங்கம் மற்றும் வெள்ளி விலை ?

0
198

தங்கம் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.பெரும்பாலான பெண்கள் தங்கத்திலேயே தங்களது முதலீட்டை செலுத்துவார்கள்.தமிழ்நாட்டுப் பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் மிகவும் அதிகம்,இதனால் தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகமும் மிக அதிகம்.

ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு,பொருளாதாரச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது.
நேற்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,728 க்கு விற்பனை செய்யப்பட்டது.மேலும் கிராமுக்கு
ரூ.4,716 க்கு விற்பனை செய்யப்பட்டது

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 37,744 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.மேலும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து 4,718 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று வெள்ளி விலை உயர்ந்துள்ளது.வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 57,300 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.57.30 என விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleதிண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உள்பட 6 பேர் பலி!
Next articleகறுப்பர் கூட்ட ஆபாசவாதி காவல்நிலையத்தில் சரண்! தமிழர்களிடையே வலுக்கும் எதிர்ப்பு.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here