தங்கம் விலை அதிரடியாக ரூ.440 சரிவு!!

Photo of author

By Parthipan K

தங்கம் விலை அதிரடியாக ரூ.440 சரிவு!!

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 8 குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.5,682 க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன்  24 கேரட் தங்கம் ரூ.45,456 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.55 குறைந்து ரூ.5,320 க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ.440 வரை குறைந்து 42,560 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து 72.50 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 72,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.