GOLD RATE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம் விலை! இன்று சவரனுக்கு எவ்வளவு குறைவு?

0
266
GOLD RATE TODAY: Dramatically low gold price! How much less is a shaver today?
GOLD RATE TODAY: Dramatically low gold price! How much less is a shaver today?

GOLD RATE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம் விலை! இன்று சவரனுக்கு எவ்வளவு குறைவு?

இந்தியாவில் பேசுபொருளாகி இருப்பது தங்கம் விலை ஏற்றம் தான்.யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது அளவிற்கு தினந்தோறும் புதிய உச்சம் தொட்டு வருகிறது.தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அதிகளவு லாபம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இவ்வாறு இருக்கையில் தங்கம் விலை சற்று மாற்றம் கண்டிருக்கிறது.அதாவது நேற்று முன்தினம் விலை உயர்வுடன் விற்கப்பட்ட தங்கம் நேற்று விலைமாற்றம் இன்றி விற்பனையானது.

இந்நிலையில் அதன் விலை சற்று சரிவை சந்தித்து இருப்பதால் நகை விரும்பிகள்,நடுத்தர மக்கள் அடைந்து இருக்கின்றனர்.

நேற்று 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை மாற்றம் இன்றி முந்தின நாள் விலைப்படி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதன் விலை சற்று குறைந்து இருக்கின்றது.

சென்னையில் நேற்று 1 கிராம் ரூ.6,870க்கும் 1 சவரன் ரூ.54,960க்கும் விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து 1 கிராம் ரூ.6,835க்கும் சவரனுக்கு ரூ.280 குறைந்து 1 சவரன் ரூ.54,680க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.39 குறைந்து 1 கிராம் ரூ.7,456க்கும் சவரனுக்கு ரூ.312 குறைந்து 1 சவரன் ரூ.59,648க்கும் விற்பனையாகின்றது.

மேலும் வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.90க்கும் ஒரு கிலோ ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleகோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட்..அரசின் அசத்தலான ஐடியா..!!
Next articleஜூஸில் விஷம் கலந்து கொடுத்தார்கள்.. மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு..!!