வேலைக்கு வந்தால் தங்க மோதிரம் பரிசு! தையல்காரர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
இந்த கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் பலர் வேலைவாய்ப்புகள் இன்றி இருக்கின்றனர்.இந்த சூழலில் மக்கள் அனைவரும் ஏதேனும் ஓர் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளி மாவட்டங்களுக்கோ செல்கின்றனர்.அவ்வாறு நமது தமிழ்நாட்டில் அதிகப்படியானோர் வட இந்தியர் இங்கு வந்து பணிபுரிகின்றனர்.அந்தவகையில் திருப்பூர் மாவட்டம்,ஆடை தயாரிப்பில் பேர் போனது.அங்கு தொழிற்சாலைகளில் பணிபுரிய ஆட்கள் இல்லாமல் முதலாளிகள் தவித்து வருகின்றனர்.
தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை தொழிற்சாலை உரிமையாளர் தான் குமார்.இவர் தனது தொழிற்சாலையில் பின்னலாடையில் ஓவர் லாக் அடிக்க தெரிந்த தையல்காரர்கள் அதிகப்படியானோர் தேவைபப்டுகின்றனர் என முதலில் விளம்பரம் செய்தார்.அங்குள்ள தொழிற்சாலைகள் அனைத்திலும் வாரம் சம்பளம் தான் தரப்படுகிறது.அவ்வாறு தரப்படும் வார சம்பளம் ரூ.6000 முதல் வழங்கப்படுகிறது.அந்த சம்பளத்திற்கே வேலை செய்ய ஆட்கள் கிடைக்காமல் அலைமோதுகின்றனர்.
இங்கு வார சம்பளம் தருவதால் சில மக்கள் சம்பளம் வாங்கியதும் அடுத்த வாரம் விடுமுறை போட்டுவிடுகின்றனர்.சரியான முறையில் வேலைக்கு வருவதில்லை.அதுமட்டுமின்றி இதனை விட அதிகம் சம்பளம் தரும் ஆலைகள் நோக்கி செல்கின்றனர்.இவ்வாறு நடந்து வரும் வேளையில் பின்னலாடை தயாரிக்கும் உரிமையாளர் ஓர் அருமையான சலுகை ஒன்றை மக்களுக்கு கூறினார்.அது என்னவென்றால்,தனது பின்னலாடை தொழிற்சாலையில் வேலைக்கு வரும் தொழிளார்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் எனக் கூறியிருந்தார்.இவர் நிறுவனத்தில் 8 மாதக் காலம் வேலை செய்தால் 9-வது மாதத் தொடக்கத்தில் தங்க மோதிர பரிசாக வழங்கப்படும் என கூறி திருப்பூர் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருந்தார்.
ஆனால் எந்த மக்களும் வேலைக்கு வர முன்வரவில்லை.ஏன் சில தொழிற்சாலையில் மக்கள் வேலைக்கு வர பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது,சில நிறுவனங்களில் மது பானனங்களே இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.ஆனால் மற்ற பொருட்களை இலவசமாக தந்த போது எந்த வித சர்ச்சையும் எழ வில்லை,ஆனால் மதுபானங்கள் இலவசமாக தந்த போது பெருமளவு சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.வேலை இல்லாமல் பலர் திண்டாடி வரும் சூழலில் மக்கள் கிடைத்த வேலையை பயன்படுத்தி கொள்ளாமல் இருக்கும் காலம் தற்போது வந்துவிட்டது.