Good Bad Ugly: அஜித் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக இருக்கிறது குட் பேட் அக்லி. ஏனெனில், விடாமுயற்சி படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குட் பேட் அக்லி படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோவில் அஜித் ஏற்கனவே நடித்து வெளியான பில்லா, மங்காத்தா, தீனா போன்ற படங்களின் ரெப்ரன்ஸ் இந்த படத்தில் இருக்கிறது.
இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான டிரெய்லர் வீடியோ வெளியாகி டபுள் டமாக்காவாக அமைந்திருக்கிறது. ஏனெனில், டீசரில் அமைந்ததை விட பல மடங்கு மாஸான காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றிருக்கிறது. ‘அவன் பயத்துக்கே பயம் காட்டுறவன்’ என அஜித்துக்கு பில்டப் ஏத்துகிறார்கள். குட் பேட் அக்லி படம் வருகிற 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
கடந்த 4ம் தேதி இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் துவங்கியது. இந்நிலையில், கடந்த 4 நாட்களில் மட்டும் 4 லட்சத்து 30 ஆயிரம் டிக்கெட்டுகளுக்கும் மேல் புக்கிங் செய்திருக்கிறார்கள். எனவே, முதல் நாளிலே இப்படம் 100 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
ஆனலைன் புக்கிங்கை பொறுத்தவரைஒ 80 சதவீத டிக்கெட்டுக்கள் கார்ப்பரேட் கம்பெனிகளால் ஏற்கனவே புக் செய்யப்பட்டு விட்டதால் ரசிகர்கள் பலருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை என்கிறரக்ள். என்கிறார்கள். மீதமிருக்கும் டிக்கெட்டுகளையும் பிய்த்து பிய்த்து கார்ப்பரேட் கம்பெனிகளாலே வாங்கி கொண்டதால் முதல் 4 நாட்களுக்கு ரசிகர்களுக்கே டிக்கெட் கிடைக்காது எனவும் சிலர் சொன்னது குறிப்பிடத்தக்கது.