அஜித்தின் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் இப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்துக்கு பல கோடிகள் நஷ்டம் என்றே சொல்லப்பட்டது. எனவே, அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அந்தநிலையில்தான் குட் பேட் அக்லி டீசர் வீடியோ வெளியாகி அவர்களை சந்தோஷப்பட வைத்தது. ஏனெனில், அஜித் ரசிகர்கள் அஜித்திடம் என்ன எதிர்பார்ப்பார்களோ அது அனைத்தும் டீசரில் இருந்தது.
டீசர் வீடியோவை பார்த்தபோது பில்லா, மங்காத்தா படத்திற்கு பின் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் படமாக குட் பேட் அக்லி இருக்கும் என நம்பப்படுகிறது. ஒரு பக்கா ஆக்சன் கேங்ஸ்டர் படமாக குட் பேட் அக்லி உருவாகியிருக்கிறது. இந்த படத்திற்கு முன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததால் குட் பேட் அக்லி மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
பல வருடங்களுக்கு பின் அஜித்தின் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. அதிலும், 2வதாக வெளிவந்த God Bless you பாடல் சிறையில் அஜித் பாடும் பாடல் போல படம் பிடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் 3வது பாடல் வருகிற 7ம் தேதி வெளியாகவுள்ளதாம். படம் வருகிற 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் பற்றிய தொடர் அறிவிப்புகளை வெளியிட்டு அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது படக்குழு. பொதுவாக அஜித் படம் என்றால் ஒரு அப்டேட்டும் இருக்காது. வலிமை படத்திற்கெல்லாம் அப்டேட்டு கேட்டு ஓய்ந்தே போனார்கள் ரசிகர்கள். அதேபோல், விடாமுயற்சி படத்திற்க்கும் பெரிதாக எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ஆனால், குட் பேட் அக்லிக்கு தொடர் அப்டேட்டுகள் வெளியாகி அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.