இப்படியும் ஒரு நல்லவர் ! தன் மனைவிக்கு காதலனுடன் கல்யாணம் பண்ணி வைத்த கணவன்!

Photo of author

By Kowsalya

இப்படியும் ஒரு நல்லவர் !தன் மனைவிக்கு காதலனுடன் கல்யாணம் பண்ணி வைத்த கணவன்!

எத்தனையோ கிராமங்களில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், கொலை, தற்கொலை என நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதில் இந்த சம்பவம் மிகவும் வித்தியாசமானது.

இந்த காலகட்டத்தில் ஒரு சின்ன விஷயத்திற்காக போலீஸ் ,கோர்ட் என அலையும் மக்கள் பலர் உள்ளனர். ஆனால் இந்த கிராமத்தில் பஞ்சாயத்து அனைத்து பிரச்சனையும் சரி செய்து மக்களை நல்வழிப் படுத்துகிறது.எல்லை மீறிய சம்பவங்கள் நடக்கும் இந்நாட்டில் இப்படியும் ஒரு நெகிழ வைத்த சம்பவம்.

பீகார் மாநிலத்தில் தட்ஜேசி என்ற கிராமத்தில் தான் இந்த அற்புத சம்பவம் நடந்துள்ளது.

இங்கு வாழ்ந்து வந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். கல்யாணம் முடிந்த கையோடு மாப்பிள்ளை வேறு ஊருக்கு பிழைப்பிற்காக சென்றிருக்கிறார்.

இதற்கிடையே மனைவி கரம் பஸ்வண் என்ற இளைஞரிடம் தொடர்பில் இருந்துள்ளார்.விசாரித்ததில் அந்த இளைஞனுக்கும் அந்தப் பெண்ணிற்கும் கல்யாணத்திற்கு முன்னதாகவே காதல் ஏற்பட்டு உள்ளது.அந்தப் பெண்ணிற்கு திருமணம் முடிந்தும் இந்த உறவு தொடர்ந்து உள்ளது.

ஒருநாள் மாப்பிள்ளையின் உறவினர்கள் எதிர்பாராத வகையில் மாப்பிள்ளையின் வீட்டிற்கு இருந்த போது அந்தப் பெண் தனது முன்னாள் காதலனுடன் தனிமையில் இருந்து வந்ததை பார்த்து அதிர்ந்து உள்ளனர்.

அதைக்குறித்து உறவினர்கள் பஞ்சாயத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து பஞ்சாயத்து நடந்துள்ளது.

அந்தப் பெண்ணின் காதலனிடம் பஞ்சாயத்து தலைவர்கள் விசாரிக்கும் பொழுது அவர் கூறியதாவது ,

நானும் அவளும் பல வருடமாக காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார்கள் அவளுக்கு வேறு திருமணம் செய்து விட்டார்கள் என்று கூறியுள்ளான்.

இதை அறிந்த பஞ்சாயத்து தலைவர்கள் செக்ஸ்படம் வெளியூரில் வேலை செய்துகொண்டிருந்த மாப்பிள்ளைக்கு போனில் அழைத்து விவரத்தை சொல்லி உள்ளனர்.

அதைக் கேட்ட அந்த இளைஞன். தன் மனைவியை காதலித்த அவள் முன்னாள் காதலனுடன் சேர்த்து வைத்து விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் இந்த பஞ்சாயத்து தலைவர்கள் அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று பஸ்வன் மற்றும் அந்தப் பெண்ணிற்கும் இருவருக்கும் கல்யாணம் முடித்து வைத்துள்ளனர். அதன்பின் இருவரும் பைக்கில் ஏறி சென்று விட்டனராம்.இது குறித்து இவர்கள் போலீசாருக்கு எந்த தகவலும் அறிவிக்கவில்லையாம் இவர்களே ஒரு முடிவுக்கு கொண்டு வந்த இந்த பிரச்சனையை முடித்து உள்ளார்களாம்.

அந்த மாப்பிள்ளையின் செயலை கண்டு அனைவரும் வியந்து உள்ளனர்.யாராக இருந்தாலும் கட்டிய மனைவியை இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்கமாட்டார்கள். ஆனால் இவர் செய்த இந்தக் காரியம் வெறிபிடித்து அலையும் ஒருசிலருக்கு ஒரு புதிய பாடமாகவே இருக்கும்.